top of page
AA Logo New.png

NTU Tamil Literary Society Alumni Association

தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் 

NTU TLS Alumni Association History & Archival 

3rd Executive Committee (2019 - 2021) President - Somasundaram

Nov 2019 - ஆண்டிறுதி பொதுக் கூட்டம் // AGM & Handover to 3rd EXCO

Date: 02/11/2019

VenueIndian Heritage Center

மூன்றாம் செயற்குழுவின் தொடக்கமான 2019 ஆண்டிறுதிக் கூட்டம் வெகு சிறப்பாக இந்திய மரபுடமை கழகத்தில் நடந்தேறியது. வெளியேறும் இரண்டாம் செயற்குழுவின் தலைவர் சுந்தர் இரண்டு வருடத்தில் தன் குழு செய்த நிகழ்வுகள் பற்றியும் சங்கம் மேலும் பிரபலமடைந்தது பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

பதவியேற்ற மூன்றாம் செயற்குழு தலைவர் சோமசுந்தரம் அடுத்த இரண்டு வருடத்திற்கான குறிக்கோள்களையும், புதிதாக தொடங்கப்பட்ட ஆலோசனைக் குழுவையும், புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் தொழில்நுட்ப இயக்குநர் பதவி பற்றியும் விவரித்தார்.

சிறப்பு விருந்தினரான திரு. தினகரன் சங்கத்தை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் வேறு பல சமூக தலைவர்களும் கலந்துகொண்டனர். தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தபின் அனைவரும் உணவருந்தி, ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்து பல புகைப்படங்களும் எடுத்துகொண்டனர். நிகழ்வும் இனிதே முடிவுற்று மூன்றாம் செயற்குழுவின் ஆரம்பத்தை தொடங்கி் வைத்தது.


The 3rd Alumni Association’s Annual General Meeting (AGM) was held at the Indian Heritage Centre (IHC) on the 2nd of November 2019. The 2nd Executive Committee, headed by Sundar Plavenderraj, handed the baton over to Sembian Somasundaram, the incoming President, after a 2-year term. The outgoing President Sundar went through all the new initiatives done by the 2nd Committee in their term and the increase in public outreach worldwide. After the handing over, the incoming President Somasundaram explained the new committee’s mission statement, goals and plans for the upcoming 2 years. He also introduced the newly founded Advisory Council for NTU TLS AA which consists of the outgoing President and Vice President. A new role in the executive committee was also introduced, the Tamil & Technological Director (T&T) director. This role was taken over by Eranian Varun and his focus was to integrate Tamil & Technology in all our initiatives and also plan for our future events. There were various community leaders present at the event and Mr Thinakaran was the Guest Of Honour for the event. He gave a speech congratulating the outgoing Executive Committee and wished the incoming committee great success in their future endeavours. Everyone had a good time interacting and taking photos after the event, together with a scrumptious biriyani for lunch.
 

April 2020 - வீட்டில் இரு, விறுவிறுப்பா இரு // Veetil Iru Viruviruppa Iru 2020

Date: 11/05/20 to 01/06/21

கிருமிப்பரவல் முறியடிப்பு (Circuit breaker) காலக்கட்டத்தில், வீட்டில் தங்கியவாரே பொதுமக்களை, தமிழ்ப் பண்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். இத்திட்டத்தில் 4 நடவடிக்கைகள், 4 வாரங்களில் நம் இணையத்தளத்திலும் சமூக ஊடகங்களிலும், ஒரு சின்னக் காணொளி மூலமாகப் பகிர்ந்துக்கொண்டோம். அதனை மற்றவர்களும் தங்கள் வீட்டில் செய்து தத்தம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். இம்முயற்சி NTU தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களுடன் சேர்ந்து நடந்தேறியது. கோலம் போடுவது, ஆடு புலி ஆட்டம் விளையாடுவது, கேசரி சமைப்பது மற்றும் வேட்டி கட்டுவது - இவையே அந்த நான்கு நடவடிக்கைகளாகும். இம்முயற்சி நம் தமிழ்ச் சமூகத்திடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் தங்களால் முடிந்த, பிடித்த  நடவடிக்கைகளை செய்து மகிழ்ந்தனர்.

Veetil Iru, Viruviruppa Iru (Stay Home, Stay Active) 2020 was a joint initiative done together with NTU TLS during the Circuit Breaker period to engage the public in activities that promoted Tamil culture. Activities like Kolam drawing, playing Aadu Puli Aattam (Goat & Tiger Game), making a sweet dessert called Kesari and tying the traditional Veshti were taught step by step and showcased in the weekly videos.  Over the month, the videos were released on our website, social media platforms like Instagram and Facebook for the viewers to recreate at home. The viewers were also encouraged to share photos and videos of themselves recreating the same activities at home on their social media pages. This initiative garnered a lot of support from the Tamil community as the intention to stay active together during tough times showed the spirit of Singapore.  This was backed up by the large number of people sharing their own photos and videos of themselves engaging in these activities as a family and spending quality time together.
 

April 2020 - சகோ // Project Sago - Excel 2020 & Finance 2021

Date: 13/10/20 & 22/10/20 (Excel)  26/01/21 (Finance)

முன்னாள் மாணவர்களும், தற்போது உள்ள தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களும் ஒன்றாக இணைந்து, வாழ்க்கைக்கு அவசியமான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டதே,  இந்த முயற்சி. இவ்வருடம் நாங்கள், இரு நிகழ்வுகளை இதன் மூலமாக செயல்படுத்தினோம். முதலாவதாக, நம் மன்றத்தின் தமிழ் தொழில்நுட்ப இயக்குனர் வருண் “Microsoft excel” அடிப்படை பயன்பாட்டைப் பற்றி இரண்டு வகுப்புகள் எடுத்தார். இத்திறன், வேலையிடங்களில் பலராலும் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், இந்த பட்டறை மூலம் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் வெகுவாகப் பயனடைந்தனர். இரண்டாவதாக, நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றான பணம் என்னும் செல்வத்தை, எப்படி சாமர்த்தியமாக நாம் கையாளலாம் என்று, “Seedly” நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் நமக்கு பட்டறை நடத்தினர். அந்த இரண்டு மணி நேரத்தில், சிங்கப்பூரில் இருக்கும் வெவ்வேறு விதமான வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள், மக்கள் சேமிப்பு நிதி (CPF), வீடு வாங்குவது மற்றும் பணத்தை முதலீடு செய்து அதைப் பெருக்குவது போன்ற செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு பெரிதும் பலன் அடைந்தனர். இதுவரையில் நடத்தப்பட்ட “சகோ” பட்டறைகளில் இதில்தான் பலரும் கலந்துக்கொண்டனர்.  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

 

Project Sago is a mentorship collaboration between NTU Alumni and members of NTU TLS. It enables us to help our juniors to prepare adequately for life after University and be ready for the upcoming challenges, be it adulting, finance and career. The Alumni members conduct workshops to share some of their soft skills that will prove to be useful in the future. This year’s Project Sago surrounded around 2 main programmes; firstly excel master programme and secondly the financial planning talk.

 

The excel master programme was conducted by NTU TLS AA’s Tech and Tamil Director, Varun, who taught participants the various functions of excel and how to maximise the different aspects of excel. This was done over 3 sessions. Participants enjoyed the sessions thoroughly and learnt a lot of new features and functionalities of MS Excel that they can apply to both their work and personal projects.

 

Secondly, 2 guest speakers from Seedly conducted workshops on the basics of personal finance. This talk was particularly useful for both graduating students and ex-students who are onto the next phase of life. The participants learnt about how to manage their personal finances once they commence work, the various types of bank accounts that are available, credit cards, how CPF works, various housing schemes that they should consider and how to invest smartly. This online talk was attended by over 30 NTU TLS and AA members who benefited greatly from the sharing. An interesting fact to note was that we had the most number of participants for the finance talk among all our Project Sago sessions thus far.

August 2020 - NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா // TLS 10th Anniversary 2020 (AA's part)

Date: 23/07/20 - 01/09/20

தமிழ் இலக்கிய மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை, கோவிட் 19 காரணத்தினால் நேரடியாக நடத்த முடியாவிட்டாலும், பத்தாண்டு காலமாக இம்மன்றத்தில் பங்களித்த அனைவரையும்  ஒன்றுசேர்த்து, மெய் நிகர் வாயிலாக கொண்டாடத் திட்டமிட்டோம். ஒவ்வொரு ஆண்டிலும் தங்கள் பங்கை ஆற்றிய இருவர், அவர்களின் பயணம் மற்றும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் வரப்போகும் அடுத்த தலைமுறை உறுப்பினர்களுக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து, ‘பத்தாண்டு பலநூறாகட்டும்’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி; தங்களுடைய பல்கலைகழக நாட்களில் எடுத்த புகைப்படங்கள், மன்றத்தின் நிகழ்ச்சிகளில் நடைபெற்ற நடன மற்றும் நாடக காணொளிகள், போன்றவற்றை மீண்டும் உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த நிகழ்வை நாம் 10 நாட்களுக்கு கொண்டாடினோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேரு காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. 10வது நாள் அன்று, நாம் நம்முடைய புதிய இணையத்தளத்தையும், சின்னத்தையும் வெளியிட்டோம். நம்முடைய புதிய இணையத்தளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் இணையத்தளத்தோடு இணைந்து இருக்கும். தமிழ் இலக்கிய மன்றமும், அவர்களின் மன்ற உருப்பினர்களோடு பத்தாம் ஆண்டு நிறைவு விழாவிற்காக சிறப்பான காணொளி வாழ்த்துக்களும், பத்து ஆண்டுகளை பிரதிபலிக்கும் வகையில் சின்னமும் வெளியிட்டனர்.

 

NTU TLS recently celebrated its 10th Year Anniversary on the 1st of August 2020. TLS has come a long way since 2010, starting off with 25 members, to almost 75 members in 2020. With a total of more than 300 students in the past 10 years, many new milestones and achievements have been accomplished. From a small community started by an enthusiastic group of NTU students, it’s now a widely known Tamil Literary society with a prestigious name in the Tamil Community as well. From various cultural shows, yearly to bi-annual musical productions, local and overseas community services, NTU TLS has come a long way. We are always thankful to the group who started this journey, guiding and advising us through the tough decisions and difficult years. TLS has not just become a society, but a big family of passionate Tamils with strongly rooted values and missions. Not only to have fun and entertain but also serve and give back to the community during their university years at the same time.

Even if COVID didn’t allow us the chance to celebrate this milestone as a family physically, we didn't want to forgo the idea of coming together to celebrate 10 years together. Hence, we brought this celebration online, to our social media platforms, where we were able to get everyone together. Some of our members might even be stuck overseas, not able to return or migrate, nevertheless, we managed to connect everyone virtually by not missing out on anyone due to physical distance. This online celebration could have even been a blessing in disguise in that way since we managed to connect everyone at such ease! Videos of past TLS members sharing their journey, sharing of members’ older videos and photos while in TLS, special 10th-year magazine edition published online, a new logo and website launched by NTU TLS AA, it was a back to back nostalgic treat indeed.

September 2020 - NTU தமிழ் இலக்கிய மன்றம் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய சின்னம் // NTU TLS AA New Logo

Date: 01/09/20

பலவிதமான உறவுகளையும், அனுபவங்களையும், வாய்ப்புகளையும் அளித்த NTU தமிழ் இலக்கிய மன்றம், நம் பல்கலைக்கழக வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை வகித்திருக்கிறது. ஆதலால், நன்றி மறவாமல், பட்டதாரிகள் ஆன பிறகும் இம்மன்றத்துடன் நம் தொடர்புகளும் சேவைகளும் தொடரும் என்பதை, நம் சின்னம் புலப்படுத்த வேண்டும் என விரும்பினோம். அதனால் தான்  NTU TLS AA சின்னத்திற்கு NTU TLS சின்னத்தின் முக்கிய அங்கமான தீபத்தை முதலில் சேர்த்து இருந்தோம். ஆனால், இவ்விரண்டு சின்னங்களும் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தன. ஒரே குடும்பம் என்றாலும், இரு மன்றங்களும் வெவ்வேறு குறிக்கோள்களையும் முயற்சிகளையும் கொண்டவை. அவ்வகையில் நம்மை சற்று வேறுபடுத்துவதற்காக NTU TLS AA சின்னத்துடன், பட்டதாரிகளைக் குறிக்கும் தொப்பியைச் சேர்த்துக்கொண்டோம். மற்றும், வயதானலும்  காலம் சென்றாலும் தங்கத்தின் மதிப்பு மாறாது என்ற, “Old is Gold” எனும் ஆங்கிலக் கூற்றுக்கு ஏற்ப, சின்னத்தில் தங்க நிறத்தையும் சேர்த்துக்கொண்டோம். இந்த மாற்றத்தினால், NTU TLS AA-யையும் அதன் முயற்சிகளையும் அடையாளம் காணும் மற்ற சிங்கை தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம் நிகழ்ச்சிகளுக்கான விளம்பர முயற்சிகளும் முன்னை விட அதிகமான மக்களைப் போய்ச் சேர்ந்துள்ளது. பட்டப் படிப்புகளை முடித்தபின், வேலை, குடும்பம் என நமக்கு பல பொறுப்புகள் இருக்கும். ஆனாலும் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் நாம் தொடர்ந்து சேவை செய்வோம் என்பதுதான், நம் புதிய NTU TLS AA சின்னத்தின் கருப்பொருளாகும்.

 

NTU TLS helped so many members forge strong bonds, provide a wider range of experiences and presented many opportunities for them to serve, grow and excel during their university days. As a continuation from our Alma Mater, the NTU TLS AA logo was modelled after the traditional Indian lamp logo that NTU TLS also has. However, since the 2 logos were not easily differentiable, we decided to upgrade the NTU TLS AA logo, with regards to Alumni and our past journey at the same time. A mortarboard was added to represent the graduates of NTU and since proverbially ‘Old is Gold’, gold tones were added to the logo. With this new logo, the new publicity materials have begun to gain more popularity amongst the public. The logo represents the continuing service of the members even after graduation, in the midst of their newfound responsibilities such as adulting, work, career and family.

September 2020 - NTU TLS AA இணையத்தளம் அறிமுகம் // Launch of Website

Date: 01/09/20

நம் சங்கத்தின் செயல்பாடுகள்  சமுதாயத்திற்கு தெரியப்படுத்த ஒரு முக்கிய தளம் தேவைப்பட்டது. மென்மேலும் வளர்ந்துக்கொண்டே வருவதால்,  நம் வளர்ச்சியையும் வரலாரையும் கூறுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் நமெக்கன தனி இணையத்தளம் தேவைப்பட்டது. 10ம் ஆண்டு விழாவின் போது வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பதால் 01/08/20 அன்று தமிழ் இலக்கிய மன்றம் முன்னாள் மாணவர் சங்கத்தின் இணையத்தளத்தை வெளியிட்டோம். முக்கியமாக, இந்த இணையத்தளம் தமிழ் இலக்கிய மன்ற இணையத்தளத்தோடு இணைந்து இருக்கவேண்டும் என்று விரும்பினோம், ஏனென்றால் அனைவரும் ஓர் தாய் வயிற்றுப் குழந்தைகள். இணையத்தளம் வரும் ஆண்டுகளில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து, சங்கத்திற்கும், சமுகத்திற்கும் பல வகையில் உதவும் என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை.

 

With its ever-growing membership and initiatives, NTU TLS AA needed a new avenue to showcase its activities to the public. A separate online site was required to feature the growth and history of the NTU TLS AA. To mark this milestone, the website was launched as part of the NTU TLS’ 10th-anniversary celebration on the 1st of August 2020. As NTU TLS and NTU TLS AA are sister associations, NTU TLS AA’s site was launched as part of the NTU TLS website. We hope that the website will be an important part of the association and provide useful materials in the future for the Tamil community. Not only will it serve as an archival of the journey we have come through, but also as a rich resource for Tamil Language, Literature and other useful content.

September 2020 - நமது மரபு // Namathu Marabu 2020

Date: 19/08/20 - 03/10/20 (Damaru) & 16/08/20 - 7/10/20 (Kalari)

நமது மரபு சார்ந்த நடவடிக்கைகளில் நம் மன்ற உறுப்பினர்கள் ஈடுபட விருப்பம் தெரிவித்ததால், இத்திட்டத்தைச் செயல்படுத்தினோம். 'டமரு சிங்கப்பூரிடமிருந்து' (Damaru Singapore) பறை இசையையும், 'களரி அகேடமியிடமிருந்து' (Kalari Academy) களரி மற்றும் சிலம்பாட்டமும் கற்றுக்கொண்டோம். இவை உடலுக்கும், மனத்துக்கும் உத்வேகம் கொடுத்து இந்த கோவிட்-19 கால சூழலில் புத்துணர்ச்சியை அளித்தன. இம்முயற்சிக்கு நம் உறுப்பினர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பட்டறை முடிந்த பின்னும் களரியும் பரை இசையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள  ஆர்வமும் தெரிவித்தனர். அதில் சிலர், தொடர்ந்து அந்தந்த நிருவனத்தோடு பயின்றும் வருகின்றனர்.

 

There was interest amongst AA members to participate in and learn traditional arts, associated only with Tamil culture. As a result, a series of workshops were organised in collaboration with Damaru Singapore and Kalari Academy. Damaru Singapore offered sessions in “Parai Isai” also known as traditional Tamil drumming using the Parai instrument while Kalari Academy conducted sessions in Kalari and Silambattam, which are Traditional Indian martial art forms. These classes were refreshing for both the mind and body, especially during the ongoing Covid-19 crisis which put a stop to our daily activities that kept us healthy. The members gave highly positive reviews of the event and many continued to attend classes with instructors in their collaborating institutes during their own time.

October 2020 - தமிழ் சோறு போடும் கருத்தரங்கு // Tamil Soru Podum 2020

Date: 17/10/20

"தமிழ் சோறு போடும்" கருத்தரங்கில் தமிழ் மொழியை எழுதிப் படிக்கும் திறன், வேலை தேடுபவர்களுக்கு எப்படி ஒரு முக்கியமான பலமாக அமையும்  என்பதைப் பற்றி மூன்று பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். மொழி ஆற்றல் தேவைப்படும் வேலைகள் மட்டும் இன்றி மக்களுக்குத்  தெரியாத, அதிகமாகப் பேசப்படாத  மற்ற வேலைகளைப் பற்றியும், கலந்து கொண்ட பேச்சாளர்கள் பகிர்ந்து கொண்டனர். நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் Ms Rageswari , அரசாங்கப் பொது பணியாளர் Ms Nasrath Hassan மற்றும் அரசாங்கத் தொடர்புத் துறையில் பணியாற்றும் Mr Narayanan ஆகிய மூவரும், தங்கள் துறைகளில் அவரவர் சிறந்து விளங்க தமிழ் மொழி எப்படி உறுதுணையாக இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டனர். 

 

அது மட்டுமல்லாமல், நம் இணையதளத்திலும் மற்ற தொழில்துறைகளில் எவ்வாறு தமிழ் பயன்படுகிறது என்று, மேலும் சில எடுத்துகாட்டுகளும் காண்பித்திருந்தோம். இதில் சி்றப்பம்சமாக நம் இணையதளத்தில்  6 மாதங்களுக்கு இந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று,  மேலும் பலரின் அனுபவங்களையும் சேர்த்து கொண்டோம். இதன் மூலம், தமிழை எவ்வாறு தங்கள் தொழில்துறையில் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்  என்பதை பற்றி தெரிந்துக்கொண்டதாக, நிகழ்ச்சியை பாராட்டி பலரும் தெரிவித்தன்ர்

 

‘Tamil Soru Podum’ (Tamil will feed you) was an enriching talk conducted to discuss how the Tamil language can be used for future job search and how it can be the reason for your career. 3 speakers were invited to share their own insights on the topic by sharing their experiences in their own careers related to Tamil, which are unconventional but involve their bilingual skill in Tamil and English. Ms Rageswari, a court translator, Ms Nasrath Hassan, a civil servant and Mr Narayanan, who works in the government communications department shared how the Tamil language has helped them excel in their careers. Apart from the workshop itself, more careers that involved skills in the Tamil language were also shared on our website. People involved in these careers were also featured in this section of our website to give more context and information about them. This feature continued on our website for more than 6 months with the aim of sharing more career options and experiences to those interested to pursue Tamil in their careers. We hoped that through this feature, more people will be willing to explore the ways in which they use Tamil language skills to excel in their careers further.

October 2020 - மூன்றாம் செயற்குழுவின் இரண்டாவது ஆண்டிறுதிக் கூட்டம் // AGM 2020

Date: 24/10/2020

மூன்றாம் செயற்குழுவின் இரண்டாவது ஆண்டிறுதிக் கூட்டம் மெய்நிகர் “Zoom” வழி நடந்தேறியது. கொரொனா சூழ்நிலையால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், கடந்த ஓராண்டில் நடந்த முயற்சிகள், முன்னேற்றங்கள் பற்றியும் சோமசுந்தரம் குறிப்பிட்டார். முக்கியாமாக சங்கத்தின் அமைப்பில் (constitution) செய்த மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் இனி் வரும் நிகழ்வுகள், திட்டங்கள், அவற்றில் அனைவரும் எப்படி கலந்துகொள்ளலாம் என்பதையும் விளக்கினார். முன்னாள் மாணவர்கள் பலர் இத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

The Annual General Meeting 2020 was held online on the 24th of October 2020. This 45-minute Zoom meeting consisted of a recap of all our past initiatives and plans that we have accomplished in the past year. The current President Sundar went through all the different aspects of backend work that also happened during the COVID lockdown. SOP creation, Database of Alumni and TLS, Website creation and a complete archival of TLS history was all done during this 4 month period. He also shared the changes and improvements made to the constitution and answered the queries regarding them. Sundar also shared the upcoming events and goals that the 3rd EXCO had targeted in the near future. The AA members who joined also showed interest in joining the future initiatives.

December 2020 - கவியின் நிழல் // Kaviyin Nizhal 2020

Date: 20/12/20

"கவியின் நிழல்" ஓர் உருவடிவமைப்பு மற்றும் புகைப்படப் போட்டி. சிங்கப்பூரில் உள்ள தமிழ்க் கலைஞர்களையும் அவர்களின் திறமைகளையும் மற்றும் தமிழின் பால் அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் வெளிக்கொணர, இந்நிகழ்வு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. முக்கியமாக உள்ளூர்த் தமிழ்க் கவிதைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, உருவடிவமைப்பு (iconography) மற்றும் புகைப்படம் (photography) வாயிலாக ஒரு புதிய முறையில் அக்கவிதையை வெளிப்படுத்துவதே இப்போட்டியின் ஒரு முக்கிய நோக்கமாகும். நாம் தமிழ் மொழி மாதம் 2020க்காக இந்த முயற்ச்சியை துடங்கினோம். கோவிட் 19 காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருந்த விழா டிசம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. நம் சங்கத்திற்கு  இந்த நிகழ்ச்சி ஒரு புதுமையான முயற்சியாகும். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் நம் மன்றத்திற்கு சமூக அளவில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

 

Kaviyin Nizhal was an Iconography and Photography competition done by NTU TLS AA on 20 December 2020. Participants were required to choose a poem from a list of local Tamil poems and provide their interpretations on the same in the form of an Iconography, illustration or photograph. The competition acted as a great platform for showcasing local youth talents and their artistic expression of the local Tamil poems. Not only did it serve to showcase the poems, but also artists of all ages to showcase their artistic and aesthetical skills. This event was organised as a part of the Tamil Language Festival 2020, which was held in December 2020 after being postponed from April 2020 due to the Covid-19 crisis. The competition, held fully online, garnered a lot of support in the local Tamil community since it was an apt platform for young and new talents to come forward as well. The participants, mainly youth, appreciated the chance to display their artistic talents through this competition.

February 2021 - கனா காணும் காலங்கள் (ஒன்றுகூடல் நிகழ்வு) // Alumni Bonding Day 2021

Date: 15/02/21, 20/02/21 & 27/02/21

NTU TLS முன்னாள் மாணவர்கள் மன்றம், இந்த கோவிட்-19 சூழலில் மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ‘கனா காணும் காலங்கள்’. இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்; பிணைப்பு நடவடிக்கைகள் மூலம் பல்கலைக்கழக நாட்களின் நட்பு அனுபவங்களை நினைவுகூர்வது. மேலும் அவரவர் கல்லூரிக்கால இலக்கிய மன்ற நிர்வாகக் குழுவில் பயணித்த நண்பர்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப் பட்டனர்.

 

காற்பந்தாட்டம், “பாட்லக்” (Potluck) ஒன்றுகூடுதல், பெயின்ட்பால் (Paintball) ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலா ஆறில் இருந்து எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவரவர், இன்றைய வாழ்வில் தங்களுடைய குடும்பம், தொழில், நண்பர்கள் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஒன்று கூடலுக்கும் மன்றம், நிதி ஆதரவும் வழங்கி ஊக்குவித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கருத்துரைத்தனர்.

 

During this Covid-19 situation, NTU TLS AA encouraged its members to have small-scaled bonding activities to keep in touch with the friends that they made during their days in NTU TLS. Some of the activities that took place were Football games, Potlucks lunch and picnic, Paintball in groups of 6 to 8 people. Participants had a chance to catch up with their friends and share their current work and family experiences. These activities were partially funded by the AA. Participants enjoyed this opportunity to catch up with old friends and wished for more such activities to be organised. They were able to reminisce and enjoy a sporty activity at the same time.

February 2021 - வருத்தப்படாத வாசகர் சங்கம் // Varuthapadathe Vasagar Sangam 2021

Date: 01/02/21 - 25/07/21

நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்தீர்கள்? பள்ளிக்கூட நாட்கள் கடந்தபின் தமிழ்ப் புத்தகங்களை, அடிக்கடி படிக்கும் பழக்கத்தை கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. படிப்பு, வேலை, குடும்பம் என பல காரணங்களால் நமக்கு தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை எனக் கூறுகிறோம். இதனால் நம்மில் பலரின் தமிழ் புழக்கமும் சற்று பாதிப்படைந்துள்ளது. 

 

நம்மால் அடிக்கடி ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடிந்தால், ஏன் தமிழ் புத்தகங்களைப் படிக்க முடியாது? இந்நிலையை மாற்றுவதற்கான ஒரு முயற்சி தான் வருத்தப்படாத வாசகர் சங்கம் (வவாச). ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும், ஒரு புத்தகத்தை அல்லது ஒரு சிறு கதையைப் பரிந்துரை செய்வோம். மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று, உறுப்பினர்கள் ஒன்று கூடி, கதைமாந்தர்கள், கருப்பொருள், எழுத்துபாணி என கதைகளை அலசி ஆராய்ந்து, அவரவர் கருத்துகளையும் பகிர்ந்துகொள்வார்கள். இதுவரை, சிங்கை, மலேசியா, இந்தியா என வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த பல எழுத்தாளர்களின் அருமையான படைப்புகளை கண்டு வந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் கதையை ஒட்டி “Kahoot” வழி கேள்விகளும் கேட்டு, அதற்குச் சிறப்பாக பதில் அளிக்கும் நபருக்கு பரிசும் அளித்தோம். வாசகர்களுக்கு இந்த அங்கம் மிகவும் பிடித்திருந்தது.

 

தமிழ்மொழியின் மீது பிரியம் கொண்ட யாரும் இச்சங்கத்தில் சேரலாம். அடிக்கடி தமிழ் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது, மற்றும் தமிழ்மொழிப் பிரியர்கள் “ஜாலியான” ஒரு சூழலில் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது; இவை தான் (வவாச)வின் முக்கிய இலக்குகள். இந்த சங்கம் 6 மாத காலம் நடைபெற்றது, அதில் 6 கதைகளை கையாண்டோம். 

முக்கியமாக, தமிழில் அதிகப் புலமை வாய்ந்தவர்கள், தமிழில் தடுமாறுபவர்கள் என எந்தப் பாகுபாடும் உறுப்பினர்களுக்கிடையே இல்லை. யாரும் தயக்கமின்றி நம் சங்கத்தில் சேரலாம்.  இது வரை கலந்துக்கொண்டவர்கள் இந்த முயற்சிக்கு பாராட்டுகளும் தங்கள் தமிழ் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தூண்டியதற்கு நன்றியையும் தெரிவித்தனர். 

 

When was the last time you read a book? Let alone a Tamil book? A lot of us may not have done so since our school days due to other responsibilities, stresses of studies, career and family and so much more. This has led to a decrease in the number of people who read books regularly, especially Tamil books. This also results in lesser usage of Tamil in the young adult population. However, it was observed that reading English books was not that rare at the same time. Thus to promote the regular reading of Tamil books, a reading club called Varuthappadatha Vasagar Sangam (VaVaSa) was formed, which means to “Read Without Worry”. At the start of each month, a Tamil book or short story would be recommended for reading to all the club members. On the last Sunday of the month, the members would all gather to discuss and analyse more about their characters, themes and writing style of the recommended reading and share their thoughts. The featured books and stories were written by various authors from Singapore, Malaysia, India and many other countries around the world. There will also be a “Kahoot” quiz portion at the end of the session, based on the book of the month. The reader with the highest score will be presented with vouchers, as an incentive to read more intently. This segment was well-liked by the readers. This book club is open to all ages and adult readers of all proficiencies. The book club ran for 6 months featuring 6 different works of literature. We hope to provide more members with a chance to rekindle their love for reading Tamil books and share their thoughts on the same in a relaxed environment, among their busy lives.    

May 2021 - இளவேனில் (இணையம் வழி கருத்தரங்கம்) // Ilavenil Online 2021

Date: 01/05/21

இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு சுவாரசியமாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கலாம் என்று, மூன்று பேச்சாளர்கள் பகிர்ந்து கொண்டனர். பங்குபெற்ற இளம் பெற்றோர்கள் அனைவரும் கருத்தரங்கம் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறினர். இரு மொழித் திறனை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி Dr. சீதா விவரித்தார். இணையத்தளத்தில் இருக்கும் வளங்களை எப்படி உபயோகித்து, பிள்ளைகளுக்கு தமிழ் மொழியின் மீது தமிழ் ஆர்வத்தை வளர்க்கலாம் என்று திருமதி தீபா (TamilwithLove) விவரித்தார். இறுதியாக பாட்டுப் பாடி, கதை சொல்லி எப்படி பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை, சுவாரசியமாகக் கற்று கொடுக்கலாம் என்று திருமதி அபி (Nool Monsters) கற்று கொடுத்தார். நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தியவர் ஏஜ்சல் ஓவியா, “AngelHeartWorks”ன் நிருவனர். இவரும் சுயமாக தமிழ் எழுத்துருவங்கள் உருவாக்குவது போன்ற கலைப்படைப்புகளை வெகு அழகாக உருவாக்குவார்.

 

அதுமட்டுமல்லாமல், நம் இணையத்தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடிய பல வளங்களைப் பகிர்ந்து கொண்டோம். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத மற்றவர்களும் பயனடைந்தனர். நம் மன்றத்திற்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

 

This year’s Ilavenil focused on how young parents can teach and nurture Tamil to their children creatively. We had 3 speakers to speak on the topic. Dr Seetha Lakshmi spoke on the importance of promoting bilingualism amongst children. Mrs Deepa from Tamilwithlove spoke on how to use online and other educational tools to build a love for language in fun and innovative ways. Finally, Mrs Abhi of Nool Monsters spoke about how to encourage Tamil in young children by singing songs and story-telling. Angel Oviya was the moderator of the event and she conducted the event really well. She is also the founder of AngelHeartWorks which features Tamil typography and other creative arts works. The resources that the speakers mentioned were also shared on our website and social media pages for the benefit of the many other young parents who could not make it to the event. The young parents who attended the event found the event very useful and thanked NTU TLS AA for organising the event.

May 2021 - நடனம், இசை, குறும்படம் காணொளிகள் // TLS + AA Cultural Videos

Date: 17/06/21

நடனம், இசை, குறும்படம் என இம்மூன்று பிரிவுகளில் முன்னாள் மாணவர்களும் தமிழ் இலக்கியமன்ற மாணவர்களும், இணைந்து காணொளிகள் தயாரித்தனர்  இதன் மூலம் இரு தரப்பினருக்குமிடையே நல்ல பிணைப்பு ஏற்பட்டது. மற்றும் தரமான, மகிழ்வூட்டும் காணொளிகள் தயாரிக்கப்பட்டன.

 

The NTU TLS and NTU TLS AA worked together to come up with a series of videos featuring the talents from both organisations. The videos featured dance, music and a short film. This collaboration provided an opportunity for both organisations to bond together and share knowledge on how to produce engaging and quality content. 

May 2021 - NTU TLS AA சட்டை // AA T-shirt

Date: 10/6/21

துவங்கப்பட்ட ஆறு ஆண்டுகளில், முதன் முறையாக முன்னாள் மாணவர் சங்கத்திற்கென ஒரு சட்டை தயாரிக்க விரும்பினோம். இதன் வடிவமைப்பு JS சசிக்குமாரால் உருவாக்கப்பட்டது. பழமையும் புதுமையும் கலந்த வடிவமைப்பு, அனைவரயும் வெகுவாகக் கவர்ந்தது. அந்தச் சட்டையில் நம் மன்றத்தின் முழக்க வரியான “ஆதி உண்டு அந்தம் இல்லை, தமிழன் மூச்சு இருக்கும் வரை”, மன்றத்தின் சின்னம் மற்றும் அதனை அணியும் உறுப்பினரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சட்டை மிகவும் அழகாக இருந்ததால் இதனை மன்ற உருப்பினர்கள் பலரும், பொது மக்கள் சிலரும் விரும்பி வாங்கிக்கொண்டனர். 

 

After 6 years of completion, NTU TLS AA decided to create a new T-Shirt, especially for its alumni members as it had not been done in the past since AA’s founding. The shirt was designed by JS Sasikumar, who used a mix of modern and traditional Tamil elements to come up with the design. This attracted a lot of Alumni to buy the shirt. Moreover, the T-shirt also features the signature tagline of the TLS, the new TLS Alumni logo and is also customised with the member’s name in Tamil on the back. Many of our members and even some public members bought this shirt due to its very innovative and fun design.

June 2021 - செய்யுளைக் கண்டுபிடி // Seyyulai Kandupidi (Tamil Heads Up)

Date: 18/6/21

இக்கால இளையர்களை ஈர்க்கும் வகையில், அவர்கள் விரும்பிப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களின் வழி தமிழைக் கொண்டுசெல்ல, கிடைத்த ஒரு அருமையான விளையாட்டுதான் “செய்யுளைக் கண்டுபிடி”. ஆங்கிலத்தில் “Heads up” எனப்படும் விளையாட்டைத் தழுவிச் செய்ததுதான் இந்த முயற்சி. தொடக்கப் பள்ளயில் வரும் செய்யுட்களை ஆங்கில உதவிச் சொற்களுடன் நாம் கண்டுபிடிக்கவேண்டும். இதில் கொடுக்கப்படும் உதவிக் குறிப்புகள் கேளிக்கையாகவும், சிறிது கடினமாகவும் இருக்கும். இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு சற்று தொழில்நுட்ப அறிவும்  தேவைப்பட்டது. இந்த முயற்சிக்கு நம் தமிழ்ச் சமூகத்திடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியாமாகத் தமிழ் முரசிலும், தமிழ்ச் செய்தியிலும் இந்த விளையாட்டைப் பற்றி பாராட்டிக் குறிப்பிட்டிருந்தனர். இது போன்று மேலும் பல புத்தாக்கம் மிக்க செயல்பாடுகளை செய்ய பலர் நம்மை ஊக்குவித்தனர்.

 

Heads Up filters were very popular on Instagram and among young users. It’s a filter where you guess the answers to various types of quizzes on topics. NTU TLS AA decided to use this as an opportunity to reach out to the younger Tamil audience and make users recall Tamil proverbs and their meaning via this Tamil version. Tamil proverbs learnt during primary school days will be flashed in their literal or comical English translation, which users will have to use to find the actual proverb. Through this initiative, reaching out to the young Tamil audience via an engaging & fun medium became accessible. This not only increased NTU TLS AA public outreach but also garnered more attention towards us. This new initiative was also picked up by the local Tamil newspaper, Tamil Murasu, and got featured the very next week after the launch. After which, it garnered more publicity and later was featured in Tamil News as well. A challenge was also initiated, where users have to guess 10 proverbs correctly and in a row to stand a chance to win food vouchers. This effective and interactive way of using Tamil and technology to promote the Tamil language in a fun setting attracted the Tamil audience, especially the Tamil youths using Instagram.

August 2021 - கனா காணும் காலங்கள் (ஒன்றுகூடல் நிகழ்வு) // Alumni Bonding Day (Online)

Date: 08/08/21

கனா காணும் காலங்கள் இம்முறை மெய்நிகர் வழியில் (zoom) நடந்தேறிய து. இரண்டு மணிநேரம் அனைவரும் குதூகலமாக, ஏற்பாடு செய்த நடவடிக்கைகளை விளையாண்டு மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் “Grab” சாப்பாட்டு பற்றுச் சீட்டுகள் கொடுக்கப்பட்டன. விளையாட்டுகளில் வென்றவர்களுக்கு மேலும் மற்ற பற்று சீட்டுகளும் கொடுக்கப்பட்டன. கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

 

In lieu of the National day holidays, we initiated Kana Kaanum Kaalangal bonding day for all our alumni members. It was a 2-hour online meeting filled with games, laughter and fun. Through this bonding day, we wanted to provide an opportunity for our members to strengthen their relationships by spending time with one another through fun and exciting activities online. 

Moreover, we wanted them to reminisce about their past journeys, memories they created together during their university lives, and create the same vibe and energy.

At the end of the event, attractive prizes and gift vouchers were also gifted to our participants and winners from the games. Many who joined also gave feedback that they enjoyed the event very much and were able to take a break from their hectic lifestyle.

August 2021 - NTU TLS AA  Archival/milestone in website //முன்னாள் மாணவர் சங்கத்தின் வரலாறு

Date: 11/08/21

எதிர்காலத்தை எதிர்கொண்டு மேலும் சிறப்பாகச் செயல்பட நம் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆதலால் நாம் செய்த நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை, நம் இணையத்தளத்தில் பதிவு செய்து வைக்க முடிவு செய்தோம். இப்பதிவுகள் நிகழ்ச்சி முடிந்த பின்பு பதிவேற்றம் செய்யப்படும். இதனை எதிர்கால சங்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, யாவரும் படிக்கலாம். நம் சங்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளலாம்.

 

History is definitely the key to our success in the future. Because this shows all the past choices and decisions we made, the positive outcomes and why they worked well. And archiving this is crucial, so that upcoming future committees also realise the need for it. Moreover, our key milestones are also displayed in an interactive fishbone chart as well, which can help to show the timeline and flow of events. This archival process will assist future generations greatly and the committee to understand what we have done thus far.

September 2021 - Murasu Kotta Vaa - LCIP // முரசு கொட்ட வா!

Date: 05/09/21

முன்னாள் மாணவர் சங்கமும் “Drum Prodigy Singapore”ம் இணைந்து "முரசு கொட்ட வா" என்கிற தொண்டூழிய நிகழ்ச்சி ஒன்று செய்திருந்தோம். இதன் மூலம் ASD உள்ள பிள்ளைகள் மேள தாள இசைக் கருவிகளைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் யோகாசனம், தியானம் போன்றவற்றையும் பிள்ளைகள் செய்து மகிழ்ந்தனர்.

பெற்றோர்களும் மேள தாள இசைக் கருவிகள் வாசிப்பதால், ASD குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொண்டனர். இந்த 2 மணி நேர பட்டறை மிகவும் பயனுள்ளதாகவும் இன்பகரமாகவும் இருந்ததாகப் பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.

 

NTU TLS AA joined hands with Drum Prodigy Singapore (DPS) for this new initiative where children with Autism Spectrum Disorder (ASD), had the opportunity to have hands-on experience with drumming. Through this collaboration, we hoped to educate parents on the positive effects of drumming on children with ASD, and provide a safe space for children with ASD to explore and learn something new! There was yoga, meditation and drumming segments organised for 5 kids (aged 5-12) in this 2-hour session. Parents of the kids were also able to know more about the positive effects of drumming, helplines or support groups for parents, and have an interaction time while joining their kids for the drumming session. 

The Indian community is pretty stigmatised when it comes to children with special needs. Most parents with special needs children are reluctant to go out as they are worried that their children might attract unwanted attention, be disruptive or gain stares from others. NTU TLS AA and DPS hoped to bring the parents out to the community rather than hiding at home. This project aimed to raise awareness and serve as an opportunity for children with special needs to be amongst the community.

September 2021 - Ezuthuru (Youth TLF) // எழுத்துரு 

Date: 12/09/21

எழுத்துரு கலை என்பது எழுத்துகளை வடிவமைப்பதாகும். அதை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி, மெய்நிகர் வழி ஒரு பட்டறை நடத்தினோம். இந்த நிகழ்ச்சி தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது. 

சசிகுமார் என்ற பிரபல உள்ளூர் கிராஃபிக் வடிவமைப்பாளரால் வழிநடத்தப்பட்ட இப்பட்டறையில் பலரும் ஆர்வமாகப் பங்கு கொண்டு பயனடைந்தனர்.

1.5 மணி நேரத்தில் எழுத்துகளை உருவாக்குவதிலிருந்து அதை கணினியில் பதிவேற்றம் செய்வது வரை சொல்லித்தரப்பட்டது. நிகழ்ச்சியின் கேள்வி பதில் அங்கத்தில் பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டு, கேள்விகளைக் கேட்டனர். 

நிகழ்ச்சி முடிந்தவுடன் “அச்சம் தவிர்” என்ற பாரதியின் செய்யுளைக்கொண்டு சுயமான எழுத்துருவகம் (typography poster) உருவாக்கும் போட்டியை நடத்தினோம். அதில் பங்குகொண்ட சிறந்த ஐந்து படைப்புகளுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. தங்கள் படைப்புகளை உருவாக்க இரண்டு வாரம் அவகாசமும் கொடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வைப் பற்றி அறிந்த அனைவரும் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Ezhuthuru refers to the designing of letters, or in an overview, typography. JS Sasikumar, our instructor, is a graphic designer and teacher, who has been in this design scene for a while now. He has even released 3 of his own Tamil fonts. Through this workshop, we wanted our participants, keen on designing Tamil fonts/typography, to be able to design their own personalised Tamil font from scratch. It was also to share knowledge on the methods of encoding the fonts for both Mac OS & Windows computer operating systems. Not only this, the principles of Tamil typography, layout, type aesthetic and the understanding of the role, purpose and function of Tamil typography were also taught by our instructor in the 1.5 hours of online training via Zoom.

At the end of the workshop, participants were encouraged to create their own Tamil font from the skills they picked up during the workshop, and submit a poster with the given words within a week from the training date. Gift vouchers were also awarded to the top 5 participants picked by the instructor. 

Everyone appreciated the new initiative in teaching how to create new fonts, especially in Tamil, because of the lack in the current Tamil font pool we have available for usage. The Q & A session at the end was very useful as participants were able to ask specific questions relating to method/ software/technical aspects and themes.

September 2021 - கலங்கரை விளக்கம் //  Tamil Literature & History

Date: 28/09/21

கப்பல்களுக்கு வழி காட்ட கலங்கரை விளக்கம் எவ்வாறு பயன்படு கிறதோ, அதனைப் போல், தமிழெனும் கடலில், முக்கியமாக நாம் அறிந்திருக்க வேண்டிய இலக்கியப் படைப்புகளை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காண்பிப்பதே இந்த “கலங்கரை விளக்கம்” திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு நூலும் அது எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. நூலின் பெயரை அழுத்தியவுடன், அதனைப் பற்றிய சிறு விளக்கமும், அந்த நூலைப் படிக்கக்கூடிய இணையத்தளத்தின் முகவரியும், அல்லது அதன் சம்மந்தப்பட்ட விவரங்கள் உள்ள இணையத்தளத்தின் முகவரியும் தோன்றும்.

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும் இந்த முயற்சி அர்பணிக்கப்படுகிறது.

This Initiative’s main focus was to archive and give a brief summary of all the various historical Tamil literary texts and content over the past 2000 or so years. It was done together with a group of NIE Tamil students and NTU TLS AA members. The main target was for the team to come up with a brief introduction of the literary texts and provide links to the actual content & reviews. So far, a catalogue of more than 75 texts has been done as the first step of this major project. This is just the beginning, and the initiative will definitely continue in the upcoming years and be added to constantly.

We received positive responses from the Tamil community and leaders. Especially from Tamil students studying Tamil literature and training to be Tamil teachers, because this serves as a good collation and a one-stop solution for them to find out about all the important texts in Taml. This gave us the confidence that we are headed in the right direction.

bottom of page