Paarvai 2018
Paarvai is a celebration of tamil literature. Together with the Tamil Language and Learning Promotion Committee, we held our event on the first day of the Tamil Language Festival. Through this event, we hope to promote Tamil Language and Literature to the youths through the use of technology. Every year, we focus on a Tamil Literature that is very meaningful to our teenagers. Likewise, this year, we selected Puranaanooru, a compilation of 400 Tamil poems written during the Sangam Times.
Hoping to effectively convey some of the meaningful messages from this text, we had a 3 part drama overarching the whole show. In between parts, we had an intense arena debate to argue about whether one of the Puranaanooru poems is applicable to today’s society. We also had a social experimental video competition for all Junior College, Polytechnic and ITE students. Through these videos, the students were able to help us understand what is the perspective that people today hold about the message conveyed by one of the poems from Purananooru.
This was followed by a segment where Kahoot was played with the audience. Kahoot is an audience participatory game where people compete to answer the question flashed on the screen as quickly as possible. Many interesting questions were asked about the content covered with regards to Purananooru in our Paarvai 2018 show. Through this, the audience managed to answer the questions together and those who gave the fastest and most accurate answers managed to win the competition. This event was graced by Dr S P Thinnappan, a reputable Tamil expert in Singapore who has played a critical role in the progress of Tamil in asian countries.
ஒவ்வொரு வருடமும் தமிழ் மொழி விழாவுடன் சேர்ந்து NTU தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் ஒரு இலக்கிய கொண்டாட்டம் தான் பார்வை 2018. தமிழ் இலக்கியம், தொழில்நுட்பம், இளைஞர்கள் என்ற மூன்றையும் இணைத்து மாபெரும் ஒரு படைப்பாக வழங்குவதே எங்கள் நோக்கம். தொன்மைவாய்ந்த தமிழில் கருத்துள்ள இலக்கியங்களை எடுத்து அதனை மக்களுக்கு புரியும்படி வழங்க நாங்கள் ஒவ்வொரு வருடமும் முயற்சிப்போம். இந்த வருடம் பெரும்பான்மையானோருக்கு தெரியாத புறநானூறு கவிதைகளை மையமாக வைத்து நிகழ்ச்சியை நடத்தினோம்.
இந்த முயற்சியில் நாங்கள் புறநானூறு கவிதைகளில் ஆராயப்பட்ட சில கருத்துக்களை ஒரு விறுவிறுப்பான விவாத களத்தில் ஆராய்ந்தோம். பின்பு மூன்று பாகங்கள் கொண்ட ஒரு நடத்தின் மூலம் புறநானூற்றில் இருந்த இரண்டு கவிதைகளின் கருத்தை மக்களுக்கு எடுத்துரைத்தோம். மேலும், நாங்கள் தொடக்க கல்லூரி, பலதுறை கல்லூரி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களுக்காக விழுத்திரு தோழா என்ற ஒரு சமூக ஆய்வு காணொளி போட்டியை நடத்தியிருந்தோம். இதில் சிறந்த மூன்று பள்ளிகளின் காணொளிகள் நிகழ்ச்சியன்று மக்களுக்கு காட்டப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கவிதையை மையமாக கொண்டிருந்த இந்த காணொளி போட்டியில் மாணவர்கள் மிக சுவாரசியமாக இக்கவிதையில் கூறப்பட்ட கருத்துகளை குறித்து மக்களின் சிந்தனை யாது என்பதை ஆய்வுகள் மூலம் வெளி கோவர்தன.
இதனை தொடர்ந்து, பிரபலமான "Kahoot!" என்ற கேள்வி பதில் விளையாட்டு அங்கம் நடந்தேறியது. சாதாரணமாக அனைவரிடமும் பொதுவாக கேள்வி கேட்டு அதற்கு ஒருவரிடம் மட்டும் பதில் கேட்டு அறிவதற்கு பதிலாக, அனைவரும் ஒன்றாக தங்கள் பதில்களை கூற இந்த வினாடி வினா போட்டி துணையாக இருந்தது. இப்படி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழ் அறிஞர் திரு சுப திண்ணப்பன் வந்து சிறப்பித்தார்.
Organising Chairman:
AR Subbu Adaikalavan
Project Directors:
Fina Jahan
M Theerthana
Revathi D/O Manoharaan
Aiswarya Manickavasagam