top of page

தமிழ் + AI

P1100362.jpeg

Artificial Intelligence (AI) is advancing very quickly, and the world is engaging in a variety of research to enhance and improve our lives. AI also has a great potential to contribute towards the development of Tamil people, the language and culture. This is why NTU Tamil Literary Society and NUS Tamil Language Society came together to present this event, Tamil +AI where many student experts in the AI field came together to present the revolution that is AI.
Students from both Universities and beyond presented a variety of prototypes relating Tamil and AI. This includes Carnatic Music and Tamil Literature. 
First of all, one of the students presented a prototype where AI was taught a compilation of songs from one Raga which is used to generate new songs in the same Raga. Moreover, the AI was also given datasets of Tamil Literary works which it used to generate its own sentences in Tamil. Although still in its development stages, the prototype raised questions about the future of literature. There was also a presentation where the AI identified objects in Tamil and another prototype where AI could recognize people's emotions by analysing their facial expressions. 
To conclude the event, a discussion forum was held where various experts and students engaging in research in line with Tamil and AI came to answer questions from the crowd. There was much concern from the crowd about whether this AI could really help to develop Tamil and particularly the language. However, our panelists very enthusiastically answered all these questions and explained further on how we, the public, could help to improve the research on Tamil+AI. It was indeed a meaningful discussion which sent the audience home with questions to reflect on about AI and Tamil.

P1100396.jpeg
P1100346.jpeg
P1100440.jpeg
P1100367.jpeg

செயற்கை நுண்ணறிவு நமது வருங்கால தொழில்நுட்பம்; உலகமே இன்று பல ஆராய்ச்சிகள் மூலம் இதை நோக்கி செல்கிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு பல புதிய சாத்தியங்களை வெளிக்கொணரும். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றமும், சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய தமிழ் + AI எனும் நிகழ்ச்சி, செயற்கை நுண்ணறிவுடன் தமிழ் மொழி இணைவதனால் வரும் புதியதொரு பரிமாணத்தை வழங்கியது. 

கர்நாடக இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நான்கு முன்மாதிரிகளை (Prototype) இரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 

முதலில், கர்நாடக இசையில் ஏற்கனவே உள்ள சில பாடல்களை செயற்கை நுண்ணறிவுக்கு கற்றுக்கொடுத்து, புதிய பாடல்களை உருவாக்க செய்தார்கள். மேலும், தொண்மைவாய்ந்த நம் தமிழ் இலக்கியத்தை செயற்கை நுண்ணறிவுக்கு கற்றுக்கொடுத்து, அதே திறன்கள் கொண்டு வேறு இலக்கியத்தை செயற்கை நுண்ணறிவு படைத்திட செய்தோம். அது மட்டுமின்றி, நம்மை சுற்றி உள்ள பொருட்களுக்கு செயற்கை நுண்ணறிவு, தமிழில் பெயர் கூறும் மாயத்தையும் நாங்கள் கண்டோம். அதோடு, மனிதர்களின் முக பாவனைகளை வைத்து அவர்களின் உணர்ச்சிகளையும் செயற்கை நுண்ணறிவு புரிந்துகொள்ள முடிந்தது. இப்படி நாம் சற்றும் எதிர்பாராத பல அதிசயங்கள் அந்த மேடையில் நிகழ்ந்தன. 

அதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு வழி வகுக்குமா என்பதை விவாதிக்கும் ஒரு கலந்துரையாடலும் நடந்தேறியது. அதில் வந்திருந்தவர்கள் பல சிந்திக்க தூண்டும் கேள்விகளை கேட்டனர். அதற்கு மிகவும் மும்மரமாக பதில் அளித்தனர் அறிஞர்கள். இது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், வந்திருந்தவர்கள் பலர் தமிழ் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர தாங்கள் எப்படி பங்காற்றலாம் என்பதை கேட்டறிந்தனர். 
 

P1100360.jpeg
P1100294.jpeg
P1100415.jpeg
bottom of page