top of page
IMG_2730.jpg
IMG_2722.jpg
IMG_9310 (1).jpg
IMG_9413.jpg

Vaniga Vettai 2019

IMG_9417.jpg

Vanigavettai is an entrepreneurship programme jointly organized by the Tamils Representative Council Youth Wing and the NTU Tamil Literary Society. This programme was exclusively organized for the Indian youths to provide them with a platform to gain guidance from industry experts on starting up companies as entrepreneurs. Youths participating in the event were grouped into teams, attended knowledge building workshops, a camp, a networking event and finally a Symposium for them to pitch their ideas and knowledge gained through the 5-month programme.

 

Each team also has specialised coaching with their industry-specific mentors. 4 industries - Education, Technology, F&B and Retail. Each mentor guided the teams in terms of scoping their business ideas to meet the industry-specific demands. They also added value by giving the teams invaluable advice on how to make their business ideas saleable.

 

The knowledge building workshop covered a wide range of topics right from ideation creation to financial and legal planning. We had various experts from diverse fields to conduct the workshop. We have had Mr Jeremy Aruldoss - Senior Manager from Ministry of Manpower who conducted a session on customer experience, University professor from NUS Business school and the Vice President of a prominent bank - Mr Tham Shanmugam and many more.

 

Following these workshops, a networking fair was held for all participants and youths where various Industry experts shared their experience and expertise. Participants were able to interact with entrepreneurs from companies such as Pottu Kara Maami, Rupini’s Holistic Beauty Holdings, ThinkTamil Academy through this networking fair.

 

Following this, an exciting 2-day camp was organized for the participants on the 1st and 2nd of June 2019. The games in the camp were designed to specifically hone their entrepreneurial skills.

Finally, a Symposium was held on the 22nd of June 2019 where each team shared their business project to a panel of Judges. The judges then chose the top three teams. We hope that all participants were able to benefit from this programme and grow into successful entrepreneurs!

IMG_2521.jpg
IMG_2505.jpg
IMG_9015.jpg
IMG_9319.jpg
IMG_9314.jpg

வணிக வேட்டை என்பது, முதன்முறையாக, தமிழ் பேரவை இளையர் பிரிவு மற்றும் NTU தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் ஒரு தொழில் முனைவு பட்டறையாகும். இப்பட்டறை முற்றிலும் நமது இந்திய இளையர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பட்டறையில் பங்கேற்கும் இந்திய இளைஞர்கள் குழுக்களாக பிரிந்து இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் சுவாரஸ்யமான சில பயிலரங்குகள், முகாம்கள், பிணைய நிகழ்ச்சிகள் மற்றும் இவை அனைத்தையும் ஒரு பிரமாண்டமான முடிவுக்கு கொண்டு வரும் கருத்தரங்கு  போன்றவற்றில் கலந்துக்கொள்ள ஒரு அறிய வாய்ப்பு கிட்டியது.

 

முதலில் நடைபெற்ற பயிலரங்குகள் மூலம், எப்படி ஒரு திட்டத்தை வகுப்பது, அதற்கான செலவுகளையும் சட்டப்படியான விதிகளையும் எவ்வாறு வகுப்பது போன்ற முக்கியமான நுணுக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். இதை, மனிதவள அமைச்சின் மூத்த மேலாளர் திரு ஜெரமி அருள்தாஸ் அவர்கள், NUS வர்த்தக பள்ளியின் பேராசிரியர், மற்றும் ஒரு பிரபல வங்கியின் துணை தலைவருமான திரு தாம் ஷண்முகம்  போன்ற முக்கிய தொழில் முனைவர்கள் எடுத்து நடத்திக்கொடுத்தனர். இந்த திட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட தொழில் நிபுணர்கள் வழிகாட்டியாக பொறுப்பேற்றிருந்தார். 

 

இந்த பயிலரங்குகளை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் பலதரப்பட்ட தொழில் நிபுணர்களிடம் தங்கள் கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற ஒரு வலைப்பின்னல் மாநாடு நடைப்பெற்றது. அதில் போட்டுக்கரமாமி, ரூபினிஸ் பியூட்டி, திங்க் தமிழ் அகாடெமி போன்ற நிறுவனங்களை சேர்ந்த தொழில் முனைவர்கள் கலந்துகொண்டு பெரும் ஆதரவை அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு விறுவிறுப்பான முகாம் மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் வந்து கலந்துகொண்டு, தொழில்முனைவர்களாக அவர்களுக்கு தேவையான சில முக்கிய திறன்களை வளர்த்துக்கொண்டார்கள். 

 

இறுதியாக, இந்த திட்டத்தை அருமையான ஒரு முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 22ஆம் ஜூன்  அன்று ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய தொழில் திட்டத்தை பகிர்ந்துகொண்டனர். இதனை தொழில் முனைவர்களான போட்டி நீதிபதிகள் கேட்டு முதல் மூன்று குழுக்களை தேர்ந்தெடுத்தனர். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் அனைவரும் பயன்பெற்று சிறந்த தொழில்முனைவர்களாய் வளருவர் என்று நாங்கள் நம்புகிறோம். 

Project Directors:

V Thanihaasalam

Darshini Appandai

bottom of page