top of page
AA Logo New.png

NTU Tamil Literary Society Alumni Association

தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் 

இளவேனில்

இளவேனில் - 2018

1.jpg

This event was done in conjunction with the Tamil Language Festival (TLF). The main objective of the event was to have young adults share how Tamil language or the different aspects of Tamil has influenced their lives. We had a special guest Shabir, who is a local Singer/actor and an upcoming music director in Indian cinema. He shared how Tamil has enabled him to achieve his dreams and improve his career. The event had good reviews and close to 100 people attended the event at The Pod, NLB. 

 

இளவேனில் 1.0 - தமிழ் மொழி மாதத்தில், தமிழ் சமூகத்திற்காக, NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இளவேனிலாகும். இளவேனில் 2018 முக்கிய கருப்பொருள் இளம் பட்டதாரிகளிடையே தமிழ் மொழியும் அதன் வேறுபட்ட அம்சங்களும் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதாகும். வசந்தம் படைப்பாளரான இலக்கியா, பல தமிழ் மேடை நாடங்களில் நடிக்கும் ஷேக், போன்ற தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவ சங்கத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் பயணத்தை பகிர்ந்துக்கொண்டார். உள்ளூர் கலைஞரும், தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் இசை அமைப்பாளருமான சபீரும் இந்நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பளித்தார். தமிழ் மொழி எவ்வாறு அவரின் கனவுகளை நினைவாக்க உறுதுனையாக இருந்ததென்று கருத்தரங்கில் பகிர்ந்துக்கொண்டார். சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வளர்கள் கலந்துக்கொண்டனர்.

இளவேனில் 2.0 - 2019

This event was done in conjunction with Tamil Language Festival (TLF) just like the previous year. The objective of the event was to have awareness of cyber crimes and emerging technologies such as machine learning and artificial intelligence and how these technologies can be applied for the betterment of our Tamil language and usage. We also had a discussion session and a few interactive booths for the audience to walk around, learn in-depth on the current cyber related issues and even try out some new technology for themselves. With a total of 100 people attending, this event had a good response as well. We will be doing it again this year as well in April together with TLF. 

இளவேனில் - இளவேனில் 2019 தமிழ் மொழி மாதத்தில் மீண்டும் நடத்தப்பட்டது. இவ்வாண்டு நிகழ்ச்சியில் தமிழ் மொழி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. நம் சமூகத்திற்க்கு இணையத்தின் வாயிலாக வரக்கூடிய ஆபத்து, அதற்கான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு வழிகள் போன்றவை இந்நிகழ்ச்சியில் கற்பிக்கபட்டது. இயந்திரம் வழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வழிகளில் எவ்வாறு தமிழ் மொழியின் பயன்பாட்டையும் மேம்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கபட்டது.

விருது - வசந்தம் தமிழ் செய்தியின் தமிழ்ச்சுடர் 2019 விருதுகளில் முதன்முறையாக வழங்கப்பட்ட புத்தாக்கப் பிரிவின் விருது நமது முன்னாள் மாணவர் சங்கத்திற்க்கு வழ்ங்கப்பட்டது. புதிதான விதத்தில் இளவேனில் மற்றும் சமூக நல திட்டம் ஃ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டாற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

5.jpg
2.jpg
3.jpg
9.jpg
bottom of page