top of page
Frozen Popsicles

நன்று

Diviyah Krishnan
NTU Material Science Student
Submission for May Kathaikalam 2019

அப்படி ஒரு வார்தையைக் கேட்டவுடன் இதயம் கனத்து இதயத்துடிப்பு நின்ற தோரனை தோன்றியது; எது மீண்டும் நடக்க கூடாது என்று நினைத்தேனோ, அதுவே திகழ்ந்தது. கனந்த இதயம் கீழே விழுந்து தூள் தூளாக உடைந்தது; இரு விழிகளிலிருந்தும் கண்ணீர் முத்துக்கள் நீரூற்றைப்போல் வழிந்தோடியன. " நீ தேர்ச்சி பெற வில்லை," என்று கூறிய ஏன் ஆசிரியர், எனது பரிதாபமான நிலையைக் கண்டு, தன்னால் இயன்றவரை என்னக்கு ஆறுதல் கூறினார். ஆனால், அவரது ஆறுதல், செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் ஆயிற்று; காரணம், மற்றவர்கள் என்னை கண்டு சிரிப்பர் என்ற எண்ணம் தான் தோன்றியது.

“நன்றி ஆசிரியர் ", என்று கூறி பள்ளிவாசலியிலுருந்து விரைவாக ஓடினேன்; எவ்வளவு வேகமாக ஓடினாலும், நான் பின்தங்கி இருப்பதும், இந்த உலகமே ஏன் முன்னாள் விரைந்து ஓடிக்கொண்டிருந்த உணர்வு ஏற்பட்டது. இவ்வுணர்வு எனக்கு புதிதல்ல. கடந்த மூன்று வருடங்களாக இதே உணர்வோடு நான் தத்தளித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், விளைவு ஒன்றுதான்; எனது தொடக்க கல்லூரி தேசிய பொது தேர்வில் தேர்ச்சி பெறுவதாய் இல்லை. இதனால், எந்த ஒரு பல்கலைகழகத்திலும் பயில எனக்கு அனுமதி கிடைக்கவில்லை; வெளிநாட்டில் பயிலவும் எனக்கு வசதியில்லை.

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது", என்பது கீதையின் கருத்தாகும். ஆனால், இதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மூன்று வருடங்களாக விடா முயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதியும் நான் தேர்ச்சி பெறாததை நினைத்து என்னையை நான் வெறுக்க தொடங்கினேன்.

பள்ளி வாசலியிலுருந்து ஓட தொடங்கிய நான், திடிரென்று மழை பெய்ததால், ஓடுவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன். காரணம், வாழ்க்கையில் விழுந்த நான், குறைந்தபச்சம் சாலையில் விழக் கூடாது என்பதே ஆகும். ஆனாலும், எனது கண்ணீர் துளிகள் மற்ற பாதசாலிகளுக்கு தெரியாமல் இருக்க, மழையில் நான் தொடர்ந்து நடந்தேன்; மழையில் நனைவது ஒரு விதமான ஆறுதலை தந்தது.

திடிரென்று, மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தும், நான் மழையில் நனையாததை உணர்ந்தேன். அதிர்ச்சியில் பக்கத்தில் திரும்பி பார்த்தேன். காந்த கண்களுடன் இருக்கும் ஒரு ஆடவர், எனக்கு குடைபிடித்து, என்னை பார்த்து புன்னகைத்தார்.

“நீ பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறாய். பயம் அடையாதே! ஏன் கவலையாக இருக்கிறாய் என்று நான் கேட்கமாட்டேன்!" என்று கூறி, மற்றொரு கையில் இருந்த தண்ணீர் புட்டியை எடுத்து, அதை மழைத் தண்ணியில் முழுதாக நிரப்பினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“இந்த தண்ணீர் புட்டி எவ்வளவு கனமாக இறக்கும் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னிடம் கேட்டார். "ம்ம்ம்ம் .......அவ்வளவு கனமாக இருக்காது. என்னாலும் இதை பிடிக்கமுடியும்," என்று சிறு குழப்பத்துடன் கூறினேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, “ஆஹா! சரி தான். இத்தண்ணீர் புட்டி அவ்வளவு கணம் இல்லை தான். ஆனால், இதுவே நான் இதை 24-மணி நேரமாக தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தால், இப்புட்டி புவியிலேயே மிகவும் கனமானது என்ற உணர்வு எனக்கு ஏற்படும். இதை போலவே நமது வாழக்கை பிரச்சனைகள். அவற்றை பற்றி சிறிதளவில் நினைத்து, கவலை பட்டு, விட்டுவிட வேண்டும். தொடர்ந்த கவலைப்பட்டால், வாழ்க்கை மிகவும் கனமாகவும் கடினமாகவும் தெரியும். எனவே, நீ உனது பிரச்சனையை பற்றி அவ்வளவாக கவலைப் படாதே! சிறிது அளவிற்கு கவலைப்பட்டு விட்டுவிடு! உன்னை சுற்றிப்பார்! வாய்ப்புகள் பல உண்டு! அழுவதை நிறுத்தி விழிகளைத் திறந்து பார்! எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!" என்று கூறி மாயமாக மறைந்தார்.

 

பீதியில் நான் நடுங்கினேன். ஆனாலும் அவர் கூறியதில் அர்த்தம் இருக்கிறது என்று நான் உணர்ந்தேன். திடிரென்று, காற்றில் ஒரு தால் பறந்து ஏன் காலடியில் விழுந்தது. அதை எடுத்து பார்த்தேன். “மஹாபாரதம் என்ற பிரபலமான நாடகத்திற்கு புது முக நடிகர்கள் தேவை! நேர் கானலுக்கு வாருங்கள்!" என்று அதில் எழுதியிருந்தது. மழை நின்று சூரிய ஒளி தோன்றியது; குறிப்பாக அந்த மர்மமான தாலில்...

bottom of page