top of page
AA Logo New.png

NTU Tamil Literary Society Alumni Association

தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் 

NTU TLS Alumni Association History & Archival 
1st Executive Committee (2015 - 2017) President - Elamaran

23 Jan 2016 - NTU தமிழ் இலக்கிய மன்றம் முன்னாள் மாணவர்கள் சங்கம் அதிகாரப்பூர்வ துவக்க விழா // AA Initiation Ceremony

Date: 23/01/2016

Venue: NTU

NTU தமிழ் இலக்கிய மன்றம் முன்னாள் மாணவர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக இன்று துவங்கப்பட்டது. முதல் செயற்குழுவின் தலைவராக இளமாறன் பதவியேற்றார். இந்நிகழ்வுக்கு 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். முன்னாள் மாணவர்கள், TLS உறுப்பினர்கள், NTU Alumni Affairs உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் திரு தினகரன் அவர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆடல், பாடல் அம்சங்களும் TLS மாணவர்களால் இடம்பெற்றன. கேலிக்கையான விளையாட்டுகளும், பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் அம்சங்களும் இடம்பெற்றன. நிகழ்ச்சி முடிந்த பின் மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்நன்நாளில் இனிதே முன்னாள் மாணவர் சங்கம் துவங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும் இன்புற்று முதல் செயற்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

 

NTU TLS Alumni Association initiation ceremony was held on the 23rd of January 2016, at the NTU Multi-purpose room. Mr Dhinakaran attended the event as Guest of Honour. Elamaran, the first President of NTU TLS AA, gave a speech regarding his plans and objectives of AA and how it will be executed. There were performances from NTU TLS members, food and some mingling session at the end for all to participate. This event was organised mainly by the NTU TLS AA, NTU TLS and in partnership with the AAO office. They also provided a small budget to execute this event. A total of 40 NTU TLS and AA members, seniors and AAO staff attended this event. 

July 2017 - முதல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி // Bonding Day

Date: 29/7/17

NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் நிகழ்வாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி அமைந்தது. NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் 6வது செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். விளையாட்டுகளும் உணவு விருந்து உபசரிப்பும் அனைவரையும் குதூகலப்படுத்தியது. தங்களின் குறிக்கோள்களை முன்னாள் மாணவர் சங்கத்தின் முதற் செயற்குழு அனைவருடனும் பகிர்ந்துகொண்டது. நட்பை உரமாக இட்டு, செழுமையாக, இனிதே நம் சங்கத்தின் நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளது. இதுபோன்று மென்மேலும் பல நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேற இது ஒரு துவக்கமாக அமைந்தது.

NTUTLSAA had its first bonding day together with juniors from NTUTLS 6th Committee. It was a fun evening with food and games. Everyone had a good time interacting and AA shared their objectives and vision with those who came. It was the start of a beautiful journey forged by friendship and the beginning of many more events to come.

bottom of page